மும்பையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் லாரிகடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பேனர் சரிந்து உயிரிழந்த சுபஸ்ரீயை போலவே, அரசின் அலட்சியத்தால் பரிதாபமாக பறிபோய் இருக்கிறது நேஹா ஷைக் என்கிற இளம்பெண்ணின் உயிர்.
சில வாரங்களுக்கு முன்னதாக, பேனர் சரிந்து லாரிக்கடியில் சிக்கி சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அரசின் மீது கோபப்பட செய்தது.
இதன் வடுக்களே மக்கள் மனதில் இருந்து மறையாத நிலையில், சாலையில் இருந்த பள்ளத்தால் தடுமாறி லாரிக்கடியில் சிக்கி, உயிரிழந்து இருக்கிறார் மும்பையை சேர்ந்த இளம்பெண் நேஹா ஷைக்.
கடந்த புதன் கிழமை அன்று, சகோதரருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த நேஹா, சாலையில் இருந்த பள்ளத்தால் வண்டி தடுமாற, தவறி சாலையில் விழுந்தார்.
துரதிஷ்ட வசமாக அந்த சமயம் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி, அவர் மீது ஏறியது. இதனால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே நேஹா உயிரிழந்தார். இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் நேஹாவிற்கு திருமணம் நிச்சயமாகி அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த சம்பவம் மும்பையையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், சாலையை முறையாக பராமரிக்காத அரசை கண்டித்தும் பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Social Plugin