Ad Code

Responsive Advertisement

எவன் செத்தா என்ன? எங்களுக்கு சாப்பாடுதான் முக்கியம்..! '108' ஆம்புலன்ஸ் டிரைவர் அட்டகாசம்


'உயிர் காக்க 108' என அவசர மருத்துவ தேவைகளுக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2005ம் ஆண்டு தமிழக அரசால் நிறுவப்பட்டத்து. இதுவரை இந்த சேவையின் மூலம் கோடிக்கணக்கான உயிர்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

அதே சமயம், அவசரம் என்று அழைத்தால் வராமல், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சிலர் அலட்சியம் காட்டுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு தமிழக மக்களால் முன்வைக்கப்படுகிறது. 

இதனை நிரூபிக்கும் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஒரு சம்பவம் நிகழ்ந்தேறி இருக்கிறது. விபத்து ஒன்றில் சிக்கி நபர் ஒருவர் உயிருக்கு போராட 108க்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் அருகில் ஆம்புலன்ஸ்கள் இல்லை என கூறப்படவே, ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு விபத்தில் சிக்கியவரை அழைத்து சென்றிருக்கின்றனர் அப்பகுதியில் இருந்த மக்கள்.

அரசு மருத்துவமனையிலோ விபத்துக்குள்ளானவரின் தீவிர நிலை கருதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சொல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் அருகில் இல்லை என கூறப்பட்ட போதும், அரசு மருத்துவமனையில் 3 ஆம்புலன்ஸ்கள் நின்றிருந்ததை கண்டு அதிர்ந்த மக்கள், 

'அடிபட்டவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவாவது உதவுமாறு' 108 ஓட்டுனரிடம் வேண்டுகோள் விடுத்து இருக்கின்றனர். ஓட்டுனரோ வேறு ஒருவர் உயிருக்கு போராடுவதாக பொய் கூறி இவர்களுக்கு உதவ மறுத்துவிட்டு, சிறிது தொலைவு சென்று உணவு உண்ண காத்திருந்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, 'மருத்துவர் சொன்னால் தான் உயிருக்கு போராடுபவர்களுக்கு உதவுவோம், எனது ஷிஃப்ட் முடிந்து விட்டது' என அலட்சியமாக பதிலளித்து இருக்கிறார் ஓட்டுநர்.

இப்படி அவசரத்துக்கு உதவ நிறுவப்பட்ட 108 சேவை, இவர்கள் போன்ற ஓட்டுனர்களின் அலட்சியத்தால் நம்பகத்தன்மை இழந்து வருவதை பாதிக்கப்பட்டவர்கள் வீடியோவாக வெளியிட்ட நிலையில் குறிப்பிட்ட வீடியோ பார்ப்பவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.