அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் இந்திய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்பனை செய்யப்படுவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பல விதங்களில் பயனுள்ளதாக அமைந்து விடும் ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் மாட்டு சாணம், தேங்காய் சிரட்டை என நாம் அற்பமாக நினைக்கும் பொருட்களையும் வெளிநாட்டவர்களுக்கு விற்று பலர் லாபம் பார்த்து வருகின்றனர்.
இப்படி வித்யாசமாக விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு மத்தியில், இந்திய நாணயங்கள் மற்றும் நோட்டுகளும் ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் இடம்பெற்று இருக்கின்றன.
நாணயங்கள் சேகரிப்போரை குறிவைத்து, பழைய மற்றும் அறிய 1 ரூபாய், 25 பைசா நாணயங்கள் பழைய 10 ரூபாய் நோட்டு என ஒவ்வொன்றும் 799 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Social Plugin