காமெடி நடிகர் யோகிபாபு தான் நடிக்க துடித்து கொண்டிருக்கும் நடிகை குறித்து மனம் திறந்து இருக்கிறார்.
காமெடி நடிகராக இருந்தும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உடனேயே டூயட் பாடி, நடிகர்கள் பலரையே பொறாமை பட செய்தவர் யோகிபாபு. அந்த டூயட் பாடலுக்கு கிடைத்த வெற்றி இன்று பல முன்னணி நடிகைகள் அவருடன் டூயட் பாட தயாராக இருக்கின்றனர்.
ஆனால், இப்படி நடிகைகளின் பேவரைட்டாக இருந்து வரும் யோகிபாபுவின் பேவரைட் நடிகையோ நம் 'கோவை சரளா' தானம். 'அவரை மாதிரி ஒரு எனர்ஜிட்டிக் ஆன காமெடி நடிகையை பார்க்க முடியாது' என புகழும் யோகிபாபு,
அவருடன் 'பாட்டி சொல்லை தட்டாதே' போன்ற ஒரு காமெடி கதையில் நடிக்க ஆர்வமாய் காத்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
Social Plugin