யோகி திரைப்படத்தில் ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யோகிபாபு. இன்று சூப்பர் ஸ்டார், தளபதி, தல என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து முன்னணி காமெடியனாக வலம்வருகிறார்.
சமீபத்தில் ஜெயம்ரவியுடன் இவர் நடித்த கோமாளி திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வரும் நிலையில் தான் வெளிவந்துள்ளது, யோகிபாபுவுக்கு கிடைத்த பாலிவுட் திரைப்பட வாய்ப்பு குறித்த தகவல்.
ஏற்கனவே ஷாருக் கான் உடன் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்திருந்த இவர், தற்பொழுது மற்றொரு முன்னணி பாலிவுட் நடிகரான ஆமீர்கான் உடன் நடிக்க இருக்கிறாராம்.
இந்த தகவலை நடிகர் யோகிபாபுவே சமீபத்திய நேர்காணலில் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Social Plugin