Ad Code

Responsive Advertisement

"மனிதனாகவே மதிக்கவில்லை" முதலாளியை லாவகமாக தீர்த்து கட்டிய வேலைக்காரர்


91 வயதான அரசு அதிகாரி வீட்டு பணியாளராலேயே திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐ.நா உட்பட பல முக்கிய துறைகளில் அரசு அதிகாரியாக பணியாற்றியவர் கிருஷ்ணா கோஸ்லா. 20 வருடங்களுக்கு முன்பே பணி ஓய்வு பெற்று டெல்லியில் வசித்து வந்த இவரது வீட்டில், கடந்த ஒன்றரை வருடங்களாக கிஷன் என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று பணிக்கு வந்த கிஷன், கோஸ்லா மற்றும் அவரது மனைவி சராஜுக்கு டீயில் மயக்கமருந்து கொடுத்து மயக்கமடைய செய்து இருக்கிறார்.

பின்னர் கொஸ்லாவை மட்டும் கழுத்தை நெரித்து கொலை செய்த கிஷன், வீட்டிலிருந்த மூன்று லட்ச ரூபாயையும் கொள்ளையடித்து சென்று இருக்கிறார்.

சில மணி நேரங்கள் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த கோஸ்லாவின் மனைவி, கணவரையும் வீட்டில் இருந்த குளிர் சாதனப்பெட்டி மற்றும் பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

அவர் அளித்த புகாரின் பெயரில், விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காணொளிகளை ஆராய்ந்து, குளிர்சாதன பெட்டியில் கோஸ்லாவின் உடலை வைத்து எவருக்கும் சந்தேகம் வராதபடி அங்கிருந்து கிஷன் தப்பியதை கண்டறிந்தனர்.


பின்னர் பிடிபட்ட கிஷனிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம், 'ஒன்றரை வருடங்களாக பணியாற்றிய தன்னை கோஷல் மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதாகவும். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தினாலேயே திட்டம்போட்டு கொலை செய்ததாகவும்' வாக்குமூலம் அளித்திருக்கிறார்.