Ad Code

Responsive Advertisement

'என் மனைவி, என் நண்பனுக்கும் மனைவிதான்'..! மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூரன்


கட்டிய மனைவியையே நண்பர்களுக்கு விருந்தாக்கி ரசித்திருக்கிறார் ஒரு விசித்திர பிறவி.

டெல்லியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் தன் கணவர் தன்னை, இயற்கைக்கு மாறான உடல் உறவிற்கும், நண்பர்களின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், கடந்த ஜனவரி மாதம் குடிபோதையில் ஒருநபரை அழைத்து வந்து, 'அவரின் ஆசைக்கு இணங்குமாறு' கணவர் கூறினார், மறுத்ததற்கு 'என் ஆபாச வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து மானத்தை வாங்கிவிடுவேன்' என மிரட்டி அந்த நபரோடு அறையில் தள்ளி கதவை மூடி விட்டார்.

அந்த நபர் என்னை கற்பழித்து வெளியே சென்றதும், மற்றொரு நபரை உள்ளே அனுப்பி மீண்டும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியதாக' தெரிவித்து இருக்கிறார். அந்த பெண்ணின் புகாரை ஏற்ற டெல்லி போலீசார், கணவர் உள்ளிட்ட மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.