சுந்தர் C இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் திரைப்படம் 'ஆக்சன்'. இத்திரைப்படத்திற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் நடிகை தமன்னா.
இது குறித்து பேசிய இயக்குனர் சுந்தர் C, 'சுபாஷ் என்கிற கதாபாத்திரத்தில் ராணுவ கமாண்டோ அதிகாரியாக நடிகர் விஷால் நடிக்கிறார். இதுவரை திரையில் அழகு பதுமையாக வலம்வந்த தமன்னாவுக்கும் இந்த திரைப்படத்தில் கமாண்டோ காதாபாத்திரம்.
படத்தில் ஏகப்பட்ட ஆக்சன் காட்சிகள் உள்ளது. அனைத்து ஸ்டண்ட் காட்சிகளையும் டூப் போடாமல் நடிகர் விஷாலே நடித்திருக்கிறார். தமன்னாவுக்கும் விஷாலுக்கு இணையான கதாபாத்திரம் தான்.
இதனால் விஷாலுக்கு இணையாக ஈடுகொடுக்க அவருக்கு கமாண்டோ பயிற்சிகள் வழங்கப்படுகிறது' என தெரிவித்தார்.
Social Plugin