நடிகர் விஜயின் பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழா பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானது. அதிலும் குறிப்பாக ரசிகர்கள் உள்ளே செல்லமுடியாமல் போலீசாரிடம் அடிவாங்கியது மிகவும் பரவலாக பேசப்பட்டது.
இதனால் நடிகர் விஜயை பலரும் விமர்சித்து வந்த நிலையில், சமூக வலைதள பிரபலமும், நடிகருமான மண்ணை சாதிக் வெளியிட்ட அநாகரிக வீடியோ ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
குறிப்பிட்ட வீடியோவில், புல் போதையில் காணப்பட்ட அவர், விஜயையும் அவரது ரசிகர்களையும் மிகவும் அநாகரிகமாக திட்டி இருந்தார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் பலர், மண்ணை சாதிக்கின் வீட்டிற்கே சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட சர்ச்சை வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியத்துடன், தனது செயலுக்கு மன்னிப்பு கோரி மற்றொரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்— A̲A̲M̲A̲I̲ K̲I̲L̲L̲E̲R̲ ⓇⓀⒶ (@AAMAI_ASITH_RKA) September 23, 2019
தப்பா பேசுன வீடியோ வந்து 1hour கூட ஆகல அதுக்குல்ல மன்னிப்பு வீடியோ 😁😁😁😆😆😆👇👇 pic.twitter.com/f9awch5qQ5
Social Plugin