நடிகர் விஜய் பட விளம்பரத்திற்காக அரசியல் கட்சிகளை சீண்டி பேசுவதும், பின்னர் பிரச்சனை எழும் போது சீண்டியவர்களிடம் மன்னிப்பு கேட்பதுமாக தான் இருக்கிறார் என பல்வேறு அரசியல்வாதிகள் விமர்சித்து இருந்தனர்.
அரசியல்வாதிகள சீண்டுறதும் அப்புறம் முதல்வர்கள் கால்ல போயி விழறதும் விஜய்க்கு சகஜம் தானே. போன படத்துல கூட முதல்வர் எடப்பாடி கால்ல ஒண்ணரை மணி நேரம் விழுந்தாரே. 😂 pic.twitter.com/tkHtBQ32ff— Trollywood (@TrollywoodOffl) September 21, 2019
இப்படி பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழாவிலும் அரசியல் கட்சிகளை சீண்டும் விதத்தில் விஜய் பேசி இருந்தது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
யார் யாரை எந்த இடத்தில் வைக்கவேண்டுமோ, அவர்களை அந்த அந்த இடத்தில் வைத்தால்தான் சரியாக இருக்கும் என அவர் பேச கடும் கண்டனங்கள் எழுந்து இருந்தது.
இதன் காரணமாக பட ரிலீஸின் போது பிரச்சனைகள் வரக்கூடும் என அஞ்சிய தயாரிப்பு நிறுவனமான AGS, இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பல்வேறு சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என விஜயிடம் வேண்டுகோள் வைத்தது.
தன்னால் ஒரு தயாரிப்பு நிறுவனம் பாதிக்கப்பட்டுவிட கூடாது என நினைத்த விஜயும், அந்த காட்சிகளை டிவி ஒளிபரப்பின் போது நீக்கிவிட அனுமதி அளித்ததாக தெரிகிறது.
இதனால் சுபஸ்ரீ விவகாரம், அரசியல் விமர்சனங்கள் என விஜய் பேசிய பல்வேறு முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர், 'அரசியல்வாதிகள் சொன்னது போலவே, பம்மி விட்டாரே விஜய்' என கிண்டல் செய்து வருகின்றனர்.
Social Plugin