Ad Code

Responsive Advertisement

ஊரானுக்கு தான் உபதேசம் போல...! மொதல்ல நீங்க திருந்துங்க விஜய்...! வாட்டி எடுக்கும் சமூக ஆர்வலர்கள்


நடிகர் விஜய் தனது திரைப்படங்களில் நாயகனாக சமூகத்தின் மீது காட்டும் அக்கறையை நிஜ வாழ்விலும் காட்ட மறுப்பதாக பலர் விமர்சிக்க துவங்கி இருக்கின்றனர்.

தனது திரைப்படங்களில் அரசியல் ஊழல், மருத்துவ துறையில் ஊழல் என பேசி மக்களின் கைதட்டல்களை அள்ளியவர் விஜய். 'ஆனால் அவர் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி, அதன் இசை வெளியீட்டு விழாவில் கூட நடக்கும் ஊழல்களை' விஜய் ஏன் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

அவர் நடிப்பில் வெளியான, 'மெர்சல்' திரைப்படத்தில் 5 ரூபாயை வாங்கி கொண்டு மருத்துவம் செய்யும், சமூக அக்கறை கொண்டவராக விஜய் நடித்திருந்ததை எடுத்து கொள்வோம். அதில் மருத்துவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதையும் சுட்டி காட்டி இருந்தார் விஜய்.

இப்படி பிறரை நியாயமாக சம்பாதிக்க சொல்லும் அவரது படங்களின் முதல் காட்சிகளின் டிக்கெட் விலை, ஆயிரம் ரூபாயை தாண்டும் கொடுமைகள் இன்றும் நிகழ்ந்தேறிவருகிறது.

ஏன் சமீபத்தில் நடந்த அவரது இசைவெளியீட்டு விழாவின் டிக்கெட் சுமார் 2000, 2500 என விற்கப்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. 'இப்படி பிறர் தவறுகளை சுட்டி காட்டி கைதட்டல் வாங்கும் விஜய், தன் பக்கம் உள்ள தவறுகளையும் திருத்திக்கொண்டால் நன்றாக இருக்கும் 'என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.