Ad Code

Responsive Advertisement

கோடி கோடியா வாங்குறதாலதான இவ்ளோ எகத்தாளம்..? முன்னணி நடிகர்களுக்கு ஆப்படிக்க காத்திருக்கும் அதிமுக


நடிகர் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களது திரைப்பட விளம்பரத்திற்காக வேண்டுமென்றே அரசியல் பேசி, பிரச்சனைகளை கிளப்பி விடுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் திரைத்துறையினரின் இவ்வித போக்கிற்க்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சட்டங்களை மாற்ற முழு வீச்சில் ஆளும் கட்சி செயல்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஒரு வார காலமே வசூல் அவகாசம் எனும் நிலையில் திரைத்துறை ஓடிக்கொண்டிருக்க, முதல் நாளில் 1000,2000 என அநியாய விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதே முன்னணி நடிகர்கள் பலரது படங்களுக்கு லாபம் ஈட்டும் யுக்தியாக இருந்து வருகிறது.

விஜய், அஜித், ரஜினி போன்ற ஒரு சில நடிகர்களின் படத்தின் முதல் நாள் காட்சியை எவ்வளவு காசு கொடுத்து வேண்டுமானாலும் பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள் எனும் நிலையில், குறிப்பிட்ட நடிகர்களின் சம்பளமும் 50 கோடியை தாண்டி விண்ணை தொட்டு விட்டது.

இப்படி இருக்க, இந்த நடைமுறைக்கு முற்றுபுள்ளி வைக்க, டிக்கெட் விற்பனை மற்றும் அதன் விவரங்களை முற்றிலும் ஆன்லைனில் கொண்டு வரும் நடவடிக்கையை அமல் படுத்த, செய்தி துறை அமைச்சரான கடம்பூர் ராஜு அவர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



இந்த திட்டம் அமல் படுத்தப்படும் நிலையில், டிக்கெட் விலை சீராகி, நடிகர்களின் சம்பளமும் பாதியாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு திரைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் விஜயின் அரசியல் விமர்சனம் ஆளும் கட்சியை இந்த முடிவிற்கு வர நிர்பந்தித்து இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.