Ad Code

Responsive Advertisement

ஓவர் ஆபாசம்.. இப்போ இது வேற..! விஜய் டிவி ஒரு 'ரெட்லைட் ஏறியா'.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரது ஃபேவரைட் போட்டியாளராக வலம்வரும் தர்சன் வெளியேற்றப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் வெற்றிபோட்டியாளராக கருதப்பட்ட தர்ஷன் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் அவர் வெளியேறி இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் மக்களின் பேவரைட் போட்டியாளரான அவருக்கு ஓட்டுக்களை அள்ளி வீச ஒரு ரசிக பட்டாளமே வெளியே உள்ளது.

அப்படி இருந்தும் தர்ஷன் வெளியேறியது எப்படி?, ஏற்கனவே வெற்றியாளரை பிக்பாஸ் நிகழ்ச்சி தீர்மானித்து விட்டதா? அப்படி தர்ஷன் இன்று வெளியேறினால் இனி பிக்பாஸ் பார்க்க மாட்டோம் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஓவர் கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனம், என பலரது எதிர்ப்பை பெற்ற விஜய் டிவி, இப்பொழுது பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்களையும் ஏமாற்றி விட்டதாக கூறி #RedLightChannelVijayTV (சிவப்பு விளக்கு விஜய் டிவி)  என்கிற ஹேஸ்டேக்கை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.