விஜய் டிவி தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் எல்லை மீறும் விதத்தில் இருப்பதாக நடிகை ஸ்ரீப்ரியா பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
தமிழகத்தில் முன்னனி டிவி சேனல்களில் ஒன்றாக வலம்வருவது விஜய் டிவி. பலருக்கு பிடித்த சேனல்களில் ஒன்றாக இருந்த போதும், காமெடி என்ற பெயரில் டபுள் மீனிங் வசனங்கள் பேசுவது, நிகழ்ச்சிகளில் பெண்களை கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக காட்டுவது என தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் சகித்து கொள்ளமுடியாத அளவிற்கு போட்டியாளர்களை உருவத்தை வைத்து, அதிகம் கேலி செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை முன்வைத்து இருப்பவர், தமிழ் சினிமா நடிகையான ஸ்ரீப்ரியா தான். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர்,
'நான் அதிகம் பார்ப்பது விஜய் டிவி தான், ஆனால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது சோகம்... ஒருவரை கேலி செய்துநகைச்சுவை செய்வது கேவலம்!' என்றிருந்ததுடன், ரசிகர்களின் ஆதரவையும் கோரி சுமார் 5 லட்சம் பேர் விஜய் டிவியை ட்விட்டரில் மட்டும் வறுத்தெடுத்து இருக்கின்றனர்.
என்னுடன்twitterல் இனைந்து நிற்க்கும்495.8kமக்களும் #உருவகேலியைஎதிர்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும்,நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன்,இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்!— sripriya (@sripriya) September 7, 2019
Social Plugin