வருகிற ஞாயிறு அன்று விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்க இருக்கும் தகவலை வெளியிட்டு இருக்கிறது பிரபல தனியார் டிவி சேனல்.
தமிழகத்தில் TRP களின் ராஜாவாக விளங்கி வருகிறது சன் டிவி. இந்நிறுவனத்தின் பெரும்பாலான பார்வைகள் டிவி சீரியல்களில் இருந்து கிடைப்பவை என்றாலும், நடிகர் விஜயின் படங்களையும் அதன் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.
விஜயின் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் போதெல்லாம் இந்த டிவி சேனலின் TRPயும் எகிறிவிடுவது வழக்கம். இப்படி இருக்க வருகிற ஞாயிறு அன்று விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க, இரட்டை விருந்தளிக்கிறது இந்நிறுவனம்.
இது குறித்த பதிவு ஒன்றினை வெளியிட்ட அந்நிறுவனம், ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படமான கில்லியும், மாலை ஆறு மணிக்கு இன்று நடைபெற இருக்கும் பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழாவையும் ஒளிபரப்ப இருக்கும் தகவலை கூறி விஜய் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து இருக்கிறது.
Sunday Double Kondaattam for #ThalapathyVijay Fans!— Sun TV (@SunTV) September 18, 2019
Watch the Super Hit #Ghilli this Sunday at 3pm on @SunTV , followed by the grand #BigilAudioLaunch at 6:30pm!
Dont miss the #ThalapathyKondaattamOnSunTV this Sunday!https://t.co/DBwJeFdGw6
Social Plugin