Ad Code

Responsive Advertisement

ஒரே ஒரு ஸ்பீச் தான்...! சூர்யாவை கதிகலங்க வைத்த தளபதி


கடந்த செப்டெம்பர் 19ம் தேதி நடிகர் விஜயின் பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாகவும் ஒரு சில சர்ச்சைகளுடனும் நடந்து முடிந்தது.

இயக்குனர் அட்லீ, விஜய், A.R. ரஹ்மான் என நட்சத்திரங்கள் பலர் கூட 10,000க்கும் மேலான ரசிகர்களின் முன்னிலையில் இசைவெளியீட்டு விழா அரங்கேறியது.   

அதிலும் குறிப்பாக பாடல், வழக்கமான அனல் பறக்கும் ஸ்பீச் என பட்டையை கிளப்பி இருந்தார் நடிகர் விஜய். இவரது இந்த பேச்சு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால்,

அதற்கு அடுத்தநாள் செப்டம்பர் 20ம் தேதி வெளியான, காப்பான் என்ற ஒரு படத்தையே மக்கள் மறந்துவிடும் படி, சமூக வலைதளமெங்கும் நடிகர் விஜய் பற்றின பேச்சாகவே இருந்தது.


இதனால் சூர்யா ரசிகர்கள் தவிர பெரும்பாலான மக்கள் காப்பான் பட ரிலீஸ் ஆன தகவலே அடுத்த நாள் செய்தித்தாள்களிலும், சுவரொட்டிகளிலும் தான் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டிய அளவுக்கு சமூக வலைத்தளங்கள் நடிகர் விஜயால் ஆக்கிரமிக்கப்பட்டது.

இதனால் காப்பான் படக்குழு சிறிது சங்கடத்துக்கு ஆளானாலும் தொடர்ந்து வெளிவந்த நேர்மறை விமர்சனங்களால், மக்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுக்க துவங்கி இருக்கின்றனர்.