Ad Code

Responsive Advertisement

விஜய்க்கு இம்புட்டு பவரா...? குவாட்டர் கோழி பிரயாணிக்கே ஒரு பய வரல... மிரளும் அரசியல் கட்சிகள்


நடிகர் விஜய்க்கு இருக்கும் உண்மையான ரசிகர் பட்டாளத்தை கண்டு மிரண்டு போய் கிடக்கின்றனவாம் தமிழக அரசியல் கட்சிகள்.

ரஜினி, கமலை தொடர்ந்து நடிகர் விஜயும் அரசியலுக்கு வர இருப்பது அவரது செய்கைகள் மூலம் உறுதியாகி இருக்கிறது. என்றாலும் 'ஒரு நடிகனுக்கு நம்மை தாண்டி யார் வாக்களிக்க போகிறார்கள்' என்ற மெத்தன போக்கும் அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவி வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழா சம்பவங்கள் விஜய்க்கு இருக்கும் உண்மையான பலத்தை அரசியல் கட்சிகளுக்கு விளக்கி இருக்கிறது.

அதாவது, பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழாவை காண 20000க்கும் மேலான ரசிகர்கள் குவிந்ததால், போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். என்றாலும் 'விஜயை பார்க்காமல் செல்லமாட்டோம் என வயதானவர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள்' என  அவருக்காக அடிவாங்கவும் ரசிகர்கள் தயாராகினர்.

இப்படி, 'அவரது தரிசனத்துக்காகவே எதையும் செய்யும் ரசிகர்கள் அவர் சொன்னால் வாக்களிக்காமலா போய்விடுவார்கள்' என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.