Ad Code

Responsive Advertisement

அம்மா ஆப்பரேஷன் காசை எடுத்து விஜய்க்கு கட்டவுட் வைத்தேன்..! விஜய் ரசிகரின் விபரீத பேச்சு..


அஜித்-விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ஒரு சில ஆர்வக்கோளாறு ரசிகர்களை பார்த்தால், 'இப்படியும் வினோத மனிதர்கள் இருக்கிறார்களா' என அதிர்ச்சியடைய வைக்கும்.

அப்படி பலரையும் திடுக்கிட வைத்து இருக்கிறார் விஜய் ரசிகர் ஒருவர்.  அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி அடிவாங்கிய ஆவேசத்தில் பேசிய ரசிகர் ஒருவர்,

'நான் விஜயின் தீவிர ரசிகன். எப்படி பட்ட தீவிர ரசிகன் என்றால் ஒருமுறை என் அம்மா ஆபரேஷனுக்கு வைத்திருந்த காசை எடுத்து சென்று, 1.5 லட்சம் செலவில் விஜய்க்கு கட்அவுட் வைத்தேன்.எனக்கே உள்ளே இடம் இல்லை' என ஆர்வக்கோளாறில் பேசி இருந்தார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, குறிப்பிட்ட ரசிகரை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.