Ad Code

Responsive Advertisement

விஜய் ரசிகர்களை அடிவாங்க விட்ட அட்லீ...? அவர்தான் காரணமா..? குவியும் குற்றச்சாட்டுகள்


பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் போலீசாரால் அடித்து விரட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த செப்டெம்பர் 19ம் தேதி, 'என் நெஞ்சில் குடி இருக்கும் ரசிக பெருமக்களே', 'என் பேனரை கிழியுங்க ரசிகர்களை அடிக்காதீங்க' என விஜய் உள்ளே பேசிக்கொண்டிருக்க வெளியே நூற்றுக்கனக்கான ரசிகர்கள் போலீசாரிடம் அடிவாங்கி கொண்டிருந்தனர்.

சுமார் 10000 பேர் வரை மட்டுமே அமரும் இட வசதி கொண்ட அரங்குக்கு 20000 ரசிகர்கள் குவிந்ததே இந்த குளறுபடிகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது. மேலும் இந்த விழாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பணியை ஒழுங்காக செய்யாததே இதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிட்டது.

அதாவது, பிகில் இசைவெளியீட்டு விழாவின் மொத்த கண்காணிப்பையும் கையில் வைத்திருந்தவர் இயக்குனர் அட்லீ தான். அவர் பார்வையாளர்களின் எண்ணிக்கையை சரியாக திட்டமிடாததே ரசிகர்கள், விஜயின் நிகழ்ச்சியிலேயே அடிவாங்கும் அளவிற்கு கொண்டு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 'படத்தின் இமேஜை உயர்த்தி காட்ட, அரங்கத்திற்கு வெளியேயும் கூட்டம் அலைமோதுகிறது என விளம்பரப்படுத்த' போலி பாஸ்கள் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமென்றே வழங்கப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு விஜய் மற்றும் அட்லீ தரப்பு பதிலளித்தால் நல்லது என திரைத்துறையினரும் பரவலாக பேசி வருகின்றனர்.