Ad Code

Responsive Advertisement

விஜயின் நண்பரையே கேவலப்படுத்திய அட்லீ..? ஒரே போடாக போட்ட தளபதி..?


இயக்குனர் அட்லீ உச்சத்திற்கு சென்றதுதான் சென்றார், பழசை எல்லாம் மறந்து விட்டு பயங்கரமாக சீன் போடுவதாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. படப்பிடிப்பிற்கு நடிகர் விஜயே எளிமையாக வந்து செல்ல, 7-8 ஜிம் பாய்ஸ் வைத்து கொண்டு இவர் செய்யும் அளப்பறைகளுக்கு அளவில்லை என்கிறது திரையுலகம்.

இப்படி இருக்க சமீபத்தில் நடிகர் விஜயின் நட்பு வட்டாரத்தில் இருக்கும், ஸ்ரீமனை அட்லீ உதாசீனப்படுத்தியதாகவும் ஒருதகவல் வலம் வருகிறது. பிகில் திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் ஸ்ரீமன் விஜயை சந்திக்க, விஜயும் அவருக்கேற்ற நல்ல கதாபாத்திரத்தை உருவாக்குமாறு அட்லியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


விஜயே சொல்லிவிட்டார் வாய்ப்பு கிடைத்துவிடும் என நம்பிக்கையில் இருந்தவரை, நீண்ட நேரம் காக்க வைத்தத்துடன், 'நாளை ஆடிசன் வாருங்கள் செட் ஆனால் பார்க்கலாம்' என உதாசீனப்படுத்தி அனுப்பி இருக்கிறார் அட்லீ. ஸ்ரீமனும் விஜயிடம் சொன்னால் பிரச்சனை ஆகிவிடும் என்கிற காரணத்தினால், அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டாராம்.

 என்றாலும் நடந்து குறித்து கேள்விப்பட்ட நடிகர் விஜயோ, 'நான் கூறியும், என் நண்பரை உதாசீனப்படுத்தும் அளவிற்கு வளர்ந்துவிட்டீர்களா?' என அட்லீயிடம் கோபப்பட்டதுடன், இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்கும் முழுக்கு போட்டு அவரை  கதிகலங்க வைத்துவிட்டாராம்.