ஒரே வருடத்தில் 200 கோடிக்கும் மேல் தனது திரைப்படங்களால் வசூல் செய்த நடிகர் என்ற பெருமையை தல அஜித் அடைந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முடி சூட மன்னர்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜித். சில வருடங்களுக்கு முன்பு வரை தொடர் தோல்வி படங்களால் துவண்டு போன இவர், வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என தொடர் வெற்றி படங்களால் மீண்டும் விட்ட இடத்தை பிடித்திருக்கிறார்.
மேலும் இந்த வருடம் வெளியான இவரது படங்களான, விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை மட்டுமே சுமார் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசிலும் சாதித்திருக்கின்றன.
இந்த சாதனையை நடிகர் விஜய் கூட படித்ததில்லை என கூறப்படும் நிலையில், அவர் வருடம் ஒரு படம் மட்டுமே கொடுத்து வருகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
Social Plugin