Ad Code

Responsive Advertisement

ஆளும் கட்சியை இப்படி டேமேஜ் பண்ணிட்டாரே விஜய்..! அனல் பறந்த பிகில் இசைவெளியீடு


பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழா நேற்று தாம்பரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் விஜயின் உரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்பார்த்தவர்களை ஏமாற்றாதபடி அரசியல் விமர்சனங்கள் ரசிகர்களுக்கான அட்வைஸ் என அனல் தெறிக்க விட்டிருக்கிறார் தளபதி விஜய்.

உதாரணத்திற்கு சுபஸ்ரீ விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 'கைது செய்யப்பட வேண்டியவர்களை கைது செய்யாமல், லாரி ஓட்டுநர், பேனர் அச்சகம் என அப்பாவிகளின் மேல் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது, பூக்கடையில் வேலை பார்த்த ஒருவனை, பட்டாசு கடையில் பணி அமர்த்துகிறார்கள். ஆனால் அன்று ஒரு வெடிகூட விற்கவில்லையாம். என்னவென்று பார்த்தால் பழைய தொழில் அனுபவத்தில் 10 நிமிடத்திற்கு ஒருமுறை பட்டாசின் மேல் தண்ணீர் தெளித்து கொண்டு இருந்திருக்கிறான்.

இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?, எவனை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ. அவன் அவனை அங்கங்கே சரியாக உட்கார வைக்க வேண்டும்' என நடிகர் விஜய் பேசியதற்கு அரங்கம் அதிர கைதட்டல்கள் குவிந்தது.