Ad Code

Responsive Advertisement

ஒரே ஒரு போட்டோதான் ஒட்டுமொத்த 'அதிமுக'வும் ஷாக்..! அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தளபதி


நடிகர் விஜய்க்கும் 'அதிமுக' கட்சிக்கும் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே சிறு சலசலப்பு இருந்து வந்தது ஊர் அறிந்த ஒரு விஷயம் தான்.

இந்த பிரச்னை ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மேலும் வலுக்க, சர்கார், மெர்சல் உள்ளிட்ட படங்களின் போது அதிமுக வினர் செய்த ரகளை காரணமாக அமைந்தது.

அதிலும் சர்கார் திரைப்படத்தை திரையிட விடாமல் அதிமுகவினர் போராட்டம் செய்தது, போஸ்டர் பேனர்களை கிழித்தெறிந்தது விஜய் ரசிகர்களை  மேலும் ஆவேசமாக்கியது.

இச்சம்பவங்களால் கிட்டத்தட்ட முக்கால் வாசி விஜய் ரசிகர்கள் 'அதிமுக'வுக்கு எதிரான மன நிலையில் இருக்கின்றனர். இப்படி இருக்க திமுக கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களது வீட்டு விசேஷத்தில் நடிகர் விஜய் பங்கு பெற்றது,

அவரது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுக வுக்கு ஆதரவாகவும் மாற்றி விடுமோ என்ற அச்சத்தினை ஆளும் கட்சிக்கு ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.