90 களில் ஒளிபரப்பான 'விடாது கருப்பு' எனும் தொடர் இன்றும் மக்கள் மத்தியில் பிரசித்தம். அந்த அளவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தொடரான மர்மதேசம் மீண்டும் யூட்யூப் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கவனம் ஈர்த்தவர் லோகேஷ். 20 வருடங்கள் கழித்து நேர்காணல் ஒன்றில் விடாது கருப்பு நிகழ்ச்சி குறித்து பேசி இருந்த நிலையில், இவரது சமீபத்திய தோற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விடாது கருப்பு மட்டுமின்றி, ஜீபூம்பா எனும் மற்றொரு தொடரிலும் நாயகனாக தோன்றிய லோகேஷ், தற்பொழுது இயக்குனராக பணியாற்றி வருகிறார். சென்ற வருடம் வெளியான '6 அத்தியாயங்கள்' திரைப்படம், ஜம்புலிங்கம் 3D ஆகியவை இவர் இயக்கத்தில் உருவாக்கியவை என்பதும் குறிப்பிடத்தத்தக்கது.
Social Plugin