அட்லீ இயக்க விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிகில். இத்திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல், வெளியாகும் ஒவ்வொரு பாடல் தகவலும் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் நேற்று வெளியான வெறித்தனம் பாடலும், வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ட்விட்டர், யூட்யூப் என சமூக வலைத்தளங்களில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி இருக்கிறது இப்பாடல்.
ட்விட்டரில் லட்சணக்கானோரால் பேசப்பட்டு முதல் இடம் பிடிக்க யூட்யூப்பிலோ வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 20,00,000 பார்வைகளை பெற்று வெறித்தனம் காட்டி வருகிறது.
தற்சமயம் 42,00,000 பார்வையாளர்களுடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் இப்பாடலை மேலும் பல சாதனைகளை தகர்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.
Social Plugin