'பிக்பாஸ், பிக்பாஸ்..' என சமூக வலைத்தளங்கள் எங்கும் ஒரே பிக்பாஸ் புராணமாகத்தான் இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் நிகழும் பித்தலாட்டங்களை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் வெளியான போதும் இன்றும் சிலர் அந்நிகழ்ச்சியை மிகவும் தீவிரமாக ஒரு சமூக பிரச்சனை போலவே பேசி வருகின்றனர்.
இப்படி இருக்க அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரான வனிதாவே, பிக்பாசின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றி இருக்கிறார். முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய வனிதா சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
இந்நிலையில் இன்று திடீரென பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் படி, 'இனி பிக்பாஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க போவதில்லை, அதில் நடக்கும் போலி நாடகங்களை பார்த்து நீங்கள் அதற்காக அடித்து கொள்ளாதீர்கள்.
யார் யாரோடு வேண்டுமானாலும் கழட்டி விடட்டும், யார் யாரை வேண்டுமானாலும் காதலிக்கட்டும். எனக்கு போலியான பிக்பாஸ் நிகழ்ச்சியை விட வெளியே உண்மையான ஒரு வாழ்க்கை இருக்கிறது' என அதிரடியாக பதிவிட்டு இருக்கிறார்.
இவரது இந்த பதிவிற்கு நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலரும், நீங்கள் உள்ளே இருக்கும் வரை நிகழ்ச்சி போலியாக தெரியவில்லையோ? என வனிதாவனின் பதிவை விமர்சித்து வருகின்றனர்.
,
Just wish this good sense had prevailed when she was there. I still remember clearly when i begged her, " why so toxic, why fight, it is a game show" , she yelled " This is a reality show ' !— Kasturi Shankar (@KasthuriShankar) September 28, 2019
But now finally its a fake drama? Only because some truths will never be shown! https://t.co/05PMz8bNz1
Social Plugin