Ad Code

Responsive Advertisement

ஸ்டைலா, கெத்தா திரும்பவும் வர்றேன்...! வைகைப்புயல் வெளியிட்ட சூப்பர் தகவல்


தமிழ் சினிமாவின் தலைசிறந்த காமெடி நடிகர்களில் ஒருவரான வைகைப்புயல் வடிவேலு ரசிகர்களுக்கு இனிமையான செய்தி ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

24ம் புலிகேசி பட பஞ்சாயத்து, அரசியல் பிரச்சனைகள் போன்றவற்றினால் வாய்ப்புகள் பறிபோய் இருந்தாலும், மக்களை தனது காமெடி காட்சிகள் மூலம் இன்றும் சிரிக்க வைத்து வருபவர் நமது வைகைப்புயல் அவர்கள்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே இவருக்கு எதிராக நின்றாலும், சினிமாவை வாழவைக்கும் ரசிக கூட்டம் இவர் பின்னே இருந்து இவரது வருகைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவி வழியாக பேசி இருந்த அவர், தனது உண்மை பிறந்தநாள் குறித்து விளக்கம் அளித்ததுடன். இந்த மாத இறுதிக்குள் ஒரு நல்ல செய்தி காத்திருப்பதாகவும் தெரிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.