Ad Code

Responsive Advertisement

சுபஸ்ரீயை காப்பாற்ற இப்படியொரு காவலர் இல்லையே..! சிறுவனின் உயிரை நொடிப்பொழுதில்காத்த காவலர்


லாரியில் குறுக்கே விழ இருந்த சிறுவனை நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ட்ருட்டி அருகே உள்ள சாலையில் போக்குவரத்து அதிகம். இதனால் வாகனங்கள் நிறைந்தபடியே சாலை காட்சியளிக்கும்.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி, இந்த சாலையை சிறுவன் ஒருவன் சைக்கிளில் கடக்க முயன்றார். அந்நேரம் பார்த்து சரக்கு லாரி ஒன்று வேகமாக வர கவனிக்காது சிறுவன் சைக்கிளை இயக்கினார்.

இதனை கண்டு அதிர்ந்த அப்பகுதி போக்குவரத்து காவலர் ஒருவர், துரிதமாக செயல்பட்டு அச்சிறுவனை தடுத்து நிறுத்தினார். இதனால் நடைபெற இருந்த விபரீதமும் காவலரின் இந்த செயலினால் தடுக்கப்பட்டது.


இந்த சம்பவத்தின் காணொளி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வலம்வரும் நிலையில், காவலரை பாராட்டியதுடன், 'பேனர் விபத்தில் சிக்கிய சுபஸ்ரீயை காப்பாற்ற, இப்படியொரு காவலர் இல்லாமல் போய்விட்டாரே!' என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.