புதிய போக்குவரத்து விதிகளின் படி, சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய விதி அமலுக்கு வந்த சூட்டோடு, ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்கள் என ஐந்து இலக்கத்தில் அபராதம் விதித்து திக்குமுக்காட செய்திருக்கின்றனர் டிராபிக் போலீசார்.
இது ஒருபுறம் என்றால், வாகனத்தின் மதிப்பை விட போலீசார் விதித்த அபராதம் அதிகமாக இருந்த காரணத்தினால், வண்டியை போலீசாரிடமே கொடுத்து சென்ற நபர் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
டெல்லியை சேர்ந்த தினேஷ் மதன் என்ற நபருக்கு, லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லை, ஹெல்மெட் அணியவில்லை போன்ற விதி மீறல்களினால் மொத்தம் 23,000 ரூபாயை அபராதமாக விதித்தனர் குர்காம் டிராபிக் போலீசார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபரோ, 'வண்டியின் மதிப்பே 15,000 ரூபாய் தான். அதனால் அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்' என டிராபிக் போலீசாரிடம் விட்டு சென்று விட்டார்.
இந்த தகவல் செய்தி சேனல்களில் ஒளிபரப்பானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட நபர் வைரலாகி வருகிறார்.
Social Plugin