Ad Code

Responsive Advertisement

ஆபாச இணையதளத்தில் 'டிக்டாக்' கவர்ச்சி வீடியோ..! கதறும் டிக்டாக் மங்கைகள்


டிக்டாக் எனும் சமூக வலைத்தளங்களில் லைக்குகளுக்காக எல்லை மீறி வீடியோக்களை வெளியிட்டுவிட்டு, பின் பிரச்சனையில் சிக்கி கொண்டு கதறும் பெண்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

வீடியோக்களில் வரம்பு மீறி கவர்ச்சி, இரட்டை அர்த்த, நேரடி அர்த்த வசனங்களை பேசி சர்ச்சைக்குரிய முறையில் பெண்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வகை வீடியோக்களுக்கு ஆபாச இணையதளங்களில் வரவேற்பு இருக்கும் நிலையில், சிலர் குறிப்பிட்ட பெண்களின் அனுமதி இன்றி இவ்வகை வீடியோக்களை அப்படிப்பட்ட இணையதளங்களில் வெளியிட்டுவிட்டு காசு பார்த்து விடுகின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட பெண்களின் பெயர் கெட்டு விடுவதனால், அலறி அடித்துக்கொண்டு காவல் துறையை நாடுகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் மட்டும் இவ்வாறு பாதிக்கப்பட்டு சுமார் 38 பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக கூறுகிறது ஒரு கருத்து கணிப்பு.