Ad Code

Responsive Advertisement

டிக்டாக் மோகம்...! வெள்ளத்தில் சிக்கி உயிரை விட்ட வாலிபர்.... வீடியோ உள்ளே


டிக்டாக்கினால் தங்களது திறமையை வெளிக்காட்டி பலர் நல்ல நிலையை அடைந்து வரும் அதே வேளையில், ஆபாசம், ஆபத்து என பலர் சீரழிந்து வருகிறார்.

இதன் காரணமாக பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ள நிலையில், டிக்டாக் வீடியோ எடுக்கும் போது வாலிபர் ஒருவர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவமும் இப்போது நிகழ்ந்தேறியுள்ளது.

தெலுங்கானா, நிஜாமாபாத், கோணூகொப்புல்லா என்கிற கிராமத்தை சேர்ந்த வாலிபர் தினேஷ். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் கப்பலவாகு பகுதியில் உள்ள தடுப்பணையில் மீன் பிடிக்க சென்றார்.

டிக்டாக் பிரியரான தினேஷ், அணையில் இறங்கி நடனமாடி, நண்பர்களை வீடியோ எடுக்க சொன்னார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனை கவனிக்காது தொடர்ந்து வீடியோ எடுத்து கொண்டிருக்க, தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட மூவர் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்த கரைக்கருகே அடித்து செல்லப்பட்ட இருவரை காப்பாற்றினர். ஆனால் தினேஷ் ஆற்றின் நடுவே இருந்த காரணத்தினால் காப்பாற்றப்பட முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் நிகழ்ந்த மூன்று நாட்களுக்கு பின் அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், இறப்பதற்கு முன்பு அவர் ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.