Ad Code

Responsive Advertisement

'மொகரம் பண்டிகை'க்காக தீ மிதித்த ஹிந்துக்கள்... மதவெறியர்களுக்கு செருப்படி கொடுத்த திருப்புவன வாசிகள்


இந்தியாவிலேயே பிற மதத்தினரையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை
போல என்னும் பெரும்பாலான மக்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவன் என அடித்துக்கொள்ளாமல் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வரும் நம் மக்கள், மத வெறியர்களுக்கு பாடம் புகட்ட ஒரு போதும் தவறியதில்லை.

இந்நிலையில் மதச்சார்பின்மையை நிரூபிக்கும் விதத்தில் நிகழ்ந்தேறி இருக்கிறது, சம்பவம் ஒன்று. திருப்புவனத்தில் உள்ள முதுவன்திடலில் பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் ஒன்று உள்ளது.

இப்பகுதி ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவர் மதத்தை மற்றொருவர் அதிகம் மதித்து வாழ்ந்து வருகின்றனர். ஹிந்துக்கள் தங்கள் நிலங்களில் விளையும் தானியங்களை முதலில் வழங்குவதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர்.

மேலும் மத ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு முஸ்லீம் பண்டிகைகளை ஒட்டி, பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலில், தீ மிதித்தல், தீ சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.


இந்நிலையில் மொகரம் பண்டிகையான இன்று, ஹிந்து மக்கள் வழக்கம்  போல தீமிதித்து நேர்த்திக்கடன்களை செலுத்தி, மதவெறி என்ற பேச்சுக்கே இடம் இன்றி, மத ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாகவிளங்கி இருக்கின்றனர்.