பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் நாயகனாக வலம்வந்த இலங்கையை சேர்ந்த விளம்பர மாடல் தர்சன் எவரும் எதிர்பார்த்திராத வகையில் நேற்று வெளியேறினார்.
இந்நிலையில் அவர் வெளியேற்றத்தில் ஏதோ தில்லு முல்லு நடந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. அதனை நிரூபிக்கும் விதத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியை நேரில் கண்ட ரசிகர்கள், தர்சனனை வழியனுப்பி வைத்த நிகழ்வு அமைந்தது.
மேலும் நேற்று கமல், லொஸ்லியா மற்றும் ரசிகர்கள் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியே அவருக்கு மாபெரும் வாய்ப்புகள் காத்திருக்கிறது என கூறியே தர்சனை வழியனுப்பி வைத்திருந்தனர்.
இந்நிலையில் அவர் வெளியேறி இறுதினங்கள் கூட நிறைவடைந்திராத நிலையில், தர்சன்நாயகனாக நடிக்க இருக்கும் திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
தர்சனின் காதலி ஷணம் ஷெட்டி தயாரித்து, அவருக்கு ஜோடியாகவும் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'மேகி' என பெயரிடப்பட்டு இருக்கிறது. சாம் சிஎஸ் இசையமைக்க, ரமேஷ் திலக், கருணாகரன், பாண்டியராஜன் ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.
Social Plugin