உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சந்திராயன்-2 செயற்கைகோளின் தரையிறக்கம் துரதிஷ்டவசமாக இறுதி கட்டத்தை நெருங்கி தோல்வியில் முடிந்தது. இதனால் திட்டப்படி 5% மட்டுமே தோல்வி அடைந்தாலும், பாகிஸ்தான் ஊடகங்கள் இந்தியாவின் தோல்வியை கொண்டாடி மகிழ்ந்தன.
சமூக வலைத்தளங்களிலும் இந்தியாவின் தோல்வி குறித்த ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தல தளபதி ரசிகர்கள் களத்தில் இறங்கினர்.
'ஆவூனா அடிச்சிக்கிறாங்க ஆனா இந்தியாவுக்கு ஒண்ணுன்னா சேந்துக்கிறாங்க' என வடிவேலு நடித்திருந்த திரைப்பட காட்சியை போல, எலியும் பூனையுமான தல தளபதி ரசிகர்கள், ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் இந்தியாவை கேலி செய்த பாகிஸ்தானுக்கு #WorthlessPakisthaan (மதிப்பே இல்லாத பாகிஸ்தான்) என்கிற பதில் ஹேஸ்டேக்குகளை பதிவிட்டு பாடம் புகட்டினார்.
அவர்களின் கடும் முயற்சியில் குறிப்பிட்ட தலைப்பில் லட்சக்கணக்கான பதிவுகள் குமிய, உலகமே பாகிஸ்தானை கண்டு சிரிக்கும் வகையில், அவர்களுக்கெதிராக தல தளபதி ரசிகர்களின் ட்வீட் உலக அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
Social Plugin