இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக ஹிந்தி இருந்தாலும், அதனை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நம் தென்னிந்தியர்களிடம் இல்லை.
இதன் காரணமாக ஹிந்தியா? தமிழா? என்கிற பஞ்சாயத்து அவ்வப்போது பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கிறது. மத்திய அரசும் ஹிந்தியை புகுத்த முயற்சிகள் எடுத்தும், எந்த பலனும் இல்லை.
இப்படி இருக்க ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகும் வெப்சீரிஸ் ஒன்றில், 'ஹிந்தியை விட தமிழ் சிறந்தது' என நடிகர் வாதிடும் காட்சியை இயக்கி இருக்கிறார் வட இந்தியரான ராஜ் நிடிமொரு.
இப்படியொரு காட்சி வட இந்தியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தாலும், தமிழக மக்களை 'ஹிந்தி காரங்களே ஒத்துக்கிட்டாங்க, அப்புறம் என்ன' என கூறும்படி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Social Plugin