தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமடைந்து இப்பொழுது படவாய்ப்புகள் மந்தமாகி இரண்டாம் கட்ட நாயகியாகவே வலம்வருகிறார் நடிகை தமன்னா.
இப்படியொரு சூழ்நிலையிலும் ஒரு கோடி சம்பளம் கேட்கும் இவர், அதற்கு தகுந்தாற்போலவே நடிக்கும் படங்களில் கவர்ச்சி விருந்தளித்து, படத்திற்கு விளம்பரமும் தேடி தந்து விடுகிறார்.
அது மட்டுமில்லாது படவாய்ப்புகள் இல்லாத குறையை போக்கிக்கொள்ளும் பொருட்டு, முன்னணி நடிகர்களின் படங்களில் உடை குறைவாக, கவர்ச்சி தூக்கலாக குத்து நடனம் ஆடும் வாய்ப்புகளுக்கும் சம்மதம் தெரிவித்து வருகிறார்.
அதே சமயம், அப்படி குத்து பாடல்களில் தோன்ற, தான் நாயகியாக நடிக்கும் திரைப்படங்களில் வாங்கும் சம்பளத்தில் பாதியை கேட்டு தயாரிப்பாளர்களை தலைசுற்றவும் வைத்துவிடுகிறாராம்.
Social Plugin