Ad Code

Responsive Advertisement

'என்னை ஏமாற்றினால் விளைவுகள் பயங்கரமா இருக்கும்' - திரையுலகினரை எச்சரிக்கும் மில்கி பியூட்டி


தமிழ்,தெலுங்கு சினிமாவின் முன்னாள் முன்னணி நடிகை மில்கி பியூட்டி தமன்னா. அவரை அடுத்து பல இளம் நடிகைகள் படையெடுத்து விட்ட நிலையில் படவாய்ப்புகள் குறைந்தாலும், சம்பளம், மற்றும் தனது கெடுபிடிகளில் விடாப்பிடியாக இருந்து வருகிறார்.

இவரது நடிப்பில் தட் இஸ் மகாலட்சுமி, பெட்ரோமேக்ஸ் ஆகிய படங்கள் உருவாகி வரும் நிலையில், தனது கெடுபிடிகளை மேலும் கூட்டி இருக்கிறார் தமன்னா.

அதாவது 'கதை கூறும் போது தன் கதாபாத்திரதிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்ததோ அதே முக்கியத்துவம் படப்பிடிப்பின் போதும் இருக்க வேண்டும்.

மாறாக கதாபாத்திரன் முக்கியத்துவம் குறைந்தால் சற்றும் யோசிக்காமல் படத்திலிருந்து விலகிவிடுவேன்' என கதை கூற வரும் இயக்குனர்களிடம் கூறி திகைக்க வைத்து வருகிறாராரம்.