Ad Code

Responsive Advertisement

நீச்சல் கற்க வந்த மாணவிக்கு பாலியல் கற்றுக்கொடுத்த பயிற்சியாளர்..! ஆசியர் தினத்தில் அரங்கேறிய கொடூரம்


தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனைக்கு அவரது பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவாவில் சுராஜித் கங்குலி என்பவர் நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னிடம் பயிற்சி பெற்றுவந்த 15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

குறிப்பிட்ட வீடியோவில் சுராஜித் கங்குலி, மாணவியை பின்புறமாக இருந்து கட்டித்தழுவி எல்லை  மீறும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இதனை அவரது தோழிகள் ரகசியமாக பதிவு செய்ய, இது போன்ற கொடுமைகளை தினமும் அனுபவிப்பதாக பாதிக்கப்பட்ட மாணவி பின்னர் பேசும் காட்சிகளும் அதில் இடம்பெற்று இருந்தது.


குறிப்பிட்ட வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டதை தொடர்ந்து, சுராஜித் கங்குலியின் பயிற்சியாளர் பதவி பறிக்கப்பட்டதுடன், போக்சே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தும் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.