Ad Code

Responsive Advertisement

போட்டி நடிகர் என்றும் பாராமல் சூர்யாவுக்கு உதவிய விஜய்... நெகிழும் தயாரிப்பாளர்


திரைத்துறையில் பல நடிக நடிகைகள், அடுத்தவர்கள் சொல்லி மூச்சி விடவே சம்பளம் பேசும் நிலையில், நடிகர் சூர்யாவுக்காக பத்து பைசா செலவின்றி, தன் சொந்த காசையும் போட்டு விளம்பர படத்தில் விஜய் நடித்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் பிரபல தயாரிப்பாளர்.

நடிகர் சூர்யா சினிமாவை தாண்டி அகரம் அறக்கட்டளையை நடத்திவருகிறார். இதன் மூலம் ஆயிரக்கணக்காக திறமை இருந்தும் வறுமையில் வாடும் மாணவர்கள் உயர்கல்வி பெற உதவி வருகிறார்.

இந்த அமைப்பின் விளம்பர படம் ஒன்று உருவாகி இருந்த நிலையில் அதில் நடிகர் சூர்யாவும், விஜயும் இணைந்து நடித்திருந்தது நினைவிருக்கலாம். குறிப்பிட்ட விளம்பர படத்திற்கு சூர்யா தரப்பு விஜயை அணுகி நடிக்க வர அனுமதி கேட்டு, சம்பள விவரங்களையும் கூறி இருக்கிறது.

என்றாலும், 'குழந்தைகள் நலனுக்கான இந்த விளம்பர படத்திற்கு ஒரு பைசா கூட வாங்க மறுத்த விஜய், தனக்கென ஒதுக்கப்பட்ட கேரவனுக்காண செலவையும் தானே ஏற்றார்' என அவரது பெருந்தன்மையை நெகிழ்ந்து கூறி இருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.