சென்னையில் பேனர் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார் இறந்தார் சுபஸ்ரீ என்ற மென் பொறியாளர். ஒட்டுமொத்த தமிழகத்தையும் கண்ணீர் விட வைத்த இந்த சம்பவம், இன்னமும் மக்கள் மனதிலிருந்து அகலவில்லை.
கண்ணிமைக்கும் நேரத்தில் நமக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என மக்களுக்கு புரிய வைத்துள்ளது இவரது மரணம். மேலும் இவரது மறைவை தங்கள் வீட்டின் இழப்பாக பலரும் கருதி இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுபஸ்ரீயின் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த சமயத்தில், டிக்டாக்கில் அவர் பதிவிட்டிருந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் உலா வர துவங்கியுள்ளது.
பெரும்பாலும் டிக்டாக் வீடியோக்களை ரசித்து பாராட்டியோஅல்லது கலாய்த்துவிட்டோ கடந்துவிடும் மக்கள், சுபஸ்ரீ யின் வீடியோக்களை இரங்கல் பதிவுகளுடன் கடந்து செல்கின்றனர்.
Social Plugin