Ad Code

Responsive Advertisement

மாணவனுடன் தனிமையில் உல்லாசம்..! கல்லூரி ஆசிரியைக்கு நிகழ்ந்த கொடுமை


தனது வகுப்பில் படிக்கும் கல்லூரி மாணவருடன் நெருங்கி பழகி வந்த ஆசிரியை பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் ஆந்திராவை சேர்ந்த விவேஸ் பொறியியல் படித்து வந்தார். அதே கல்லூரியில் உதவி பேராசிரியையாக 25 வயதான இளம்பெண் பணி புரிந்து வந்தார்.

இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறி நெருங்கி பழகி வந்திருக்கின்றனர். இந்த நெருக்கம் இருவரும் தனிமையில் உறவு வைத்து கொள்ளும் அளவிற்கு எல்லை மீறி இருக்கிறது.

இந்நிலையில் இருவரும் தனிமையில் இனிமை கண்டதை, ஆசிரியைக்கு தெரியாமல் மாணவன் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவை ஆபாச இணையதளத்தில் விட்டு விடுவேன் எனக்கூறி ஆசிரியையை பணம் கேட்டு மாணவன் மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, காவல் நிலையத்தில் புகார் அளிக்க, மாணவனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.