Ad Code

Responsive Advertisement

படப்பிடிப்பில் திகிலூட்டிய பேய்!!! நடிகை வெளியிட்ட அமானுஷ்ய தகவல்


சமீபத்தில் 350 கோடி ரூபாய் எனும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருமாகி இருந்த திரைப்படம் சாஹோ. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை ஸ்ரதா கபூர்.

ஹிந்தியில் முன்னணி நாயகியாகவும் வலம்வரும் இவர், படப்பிடிப்பில் தனக்கு நடந்த அமானுஷ்ய சம்பவத்தை அண்மையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த அவர், எனக்கு பேய் படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். மேலும் நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது என நம்புகிறவள் நான்.

சொல்லப்போனால் நானே இத்தகைய அமானுஷ்ய அனுபவத்தை கடந்து வந்திருக்கிறேன். ஒரு முறை படப்பிடிப்பில் படக்குழுவில் பணியாற்றிய ஒருவர், உயரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

என்ன என்று விசாரித்த போது, யாரோ தன்னை பின்னால் இருந்து தள்ளிவிட்டதை போல இருந்ததாக தெரிவித்து பீதியை கிளப்பினார். அன்று படப்பிடிப்பு முடியும் வரை பயந்துகொண்டே தான் இருந்தேன்' என தெரிவித்திருந்தார்.