செல்போன் பேசிக்கொண்டே பாம்புகள் மீது அமர்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவரது கணவர் ஜெய்சிங் தாய்லாந்து நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டெம்பர் 13ம் தேதி, கணவருடன் போனில் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
பேச்சு ஆர்வத்தில் அவரது படுக்கையில் பின்னிப்பிணைந்து உறவில் ஈடுபட்ட பாம்புகளை கவனிக்காமல் அவற்றின் மீது மேல் அமர்ந்துவிட, விஷ பாம்புகள் அவரை கடித்து இருக்கிறது.
இதனால் சில நிமிடங்களில் கீதா மயங்கி விழுந்துவிட, குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். என்றாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், 'கோரக்ப்பூர் பகுதியில் பாம்புகள் நடமாட்டம் மிக அதிகம். வீட்டிற்குள் பாம்புகள் நுழைந்தது தெரியாமல், அவற்றின் மீதே அமர்ந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கோரக்பூர் மக்கள் பாம்புகளிடம் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது' என்றனர்.
Social Plugin