Ad Code

Responsive Advertisement

மக்கள் நலனுக்காக 10-கோடியை உதறிய நடிகை..! தமிழ் நடிகைகள் திருந்துவார்களா..?


'யார் எக்கேடு கேட்டால் எனக்கென்ன.. காசு வந்தால் போதும்' என பணத்திற்காக கண்ட கண்ட பொருட்களின் விளம்பரங்களில் பெரும்பாலான திரைத்துறை பிரபலங்கள் நடிப்பது வழக்கம்.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, அஜித் உள்ளிட்ட சிலர் மட்டுமே மக்களின் நலன் கருதி, கோடி கோடியாய் கொடுக்கும் விளம்பரங்களில் நடிக்க மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியும் கிடைக்க இருந்த '10 கோடி ரூபாயை விட, ரசிகர்கள் மற்றும் மக்களின் நலன் தான் முக்கியம்' என விளம்பர படம் ஒன்றில் நடிக்க மறுத்த தகவல் வெளிவந்துள்ளது.

44 வயதாகியும் 18 வயது பெண்ணை போல இளமையாக தோற்றமளிக்கும் ஷில்பா ஷெட்டியிடம், ஆயூர் வேத மருந்து நிறுவனம் எங்கள் பொருட்களை பயன்படுத்தியதால் தான், தான் இன்றும் இளமையாக இருப்பதாக விளம்பரம் ஒன்றில் நடிக்க அழைப்பு விடுத்து இருக்கின்றனர்.


மேலும் அதற்கு சம்பளமாக 10 கோடி ரூபாய் தருவதாக அந்நிறுவனம் கூறியும், 'நாம் எப்போதும் இளமையாக இருக்க, நம் வாழ்க்கை முறை மட்டுமே காரணம். எந்த வித மருந்து மாத்திரைகளும் அதனை சரி செய்து விட முடியாது.

இன்று நீங்கள் தரும் பணத்திற்காக எனது ரசிகர்களையும் மக்களையும் தவறான பாதைக்கு திருப்ப விரும்பவில்லை' எனக்கூறி நிராகரித்து இருக்கிறார்.