Friday, 13 September 2019

பிக்பாஸ் ஷெரீனுக்கு இப்படியொரு அம்மாவா..! சிரிப்பொலியில் கலகலத்த பிக்பாஸ் இல்லம்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஷெரீனுக்கு 'இவ்வளவு கலகலப்பான தாயாரா?' என ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது சமீபத்திய ப்ரோமோ.

பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து விட்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்கள் நண்பர்கள் வந்து செல்கின்றனர்.
 இந்நிலையில் நடிகை ஷெரினின் தயார் யசோதாவும் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வர இருப்பதை ப்ரோமோ மூலம் உறுதி செய்து இருக்கிறது விஜய் டிவி.

லொஸ்லியா, கவின், சேரன், முகின் என உறவினர்களின் வருகை, கண்ணீர், பாசம் என செண்டிமெண்டாக சென்ற நிலையில், ஷெரீனின் தாயாரோ அனைவரிடமும் ஜாலியாக பேசி வீட்டையே கலகலக்க வைத்து இருக்கிறார்.

   
Disqus Comments
'