இந்நிலையில் இவர் கூறிய புதிய யோசனை ஒன்று, தமிழக கணவர் மார்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதாவது தமிழக இல்லங்களில் ஆண்மகன்களின் பெரிய தலைவலியாக இருப்பது சின்னத்திரை சீரியல்கள் தான்.
எவன் வாழ்க்கையை எப்படி கெடுப்பது, மாமியாரை எப்படி கொடுமை படுத்துவது, கள்ள காதல் புரிவது எப்படி என குடும்பங்களை சீரழிக்கும் ஒன்றாகவே சின்னத்திரை வலம்வருகிறது.
இப்படியொரு சூழ்நிலையில், சமீபத்தில் பேசிய செல்லூர் ராஜு அவர்கள், 'பெண்கள் சீரியல்களை பார்ப்பதற்கு பதிலாக கார்ட்டூன் அல்லது நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்யமாக பிறக்கும்' என்கிற கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
இதனை கேட்ட ஆண்மகன்கள் பலரும் செல்லூர் ராஜுவின் இந்த யோசனையை ஒரு மனதாக ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.
Social Plugin