கடந்த வாரம் பேனர் சரிந்ததில் சுபஸ்ரீ என்ற சென்னையை சேர்ந்த இளம்பெண், நிலைதடுமாறி சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தற்பொழுது இது போன்ற சிறு தவறுகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதத்தில் செல்ப் பேலன்ஸிங் பைக்குகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க துவங்கி இருக்கிறது.
கட்டுப்பாட்டை இழந்து கீழே தவறி விழும் காரணங்களினாலேயே, இருசக்கர வாகன விபத்துகள் பெரும்பாலும் நிகழ்ந்தேறி வருகின்றன. இது போன்ற விபத்துக்களை தவிர்க்கவும், இரு சக்கர வாகன பயணங்களை சொகுசாக்கவும் 'செல்ப் பேணலன்ஸிங்' தொழில்நுட்பத்தை புகுத்தி மாபெரும் புரட்சியை செய்திருக்கின்றனர் கோரக்பூர் ஐஐடி மாணவர்கள்.
எவ்வளவு விசை கொடுத்தாலும், வாகனம் பக்கவாட்டில் சரிந்து விடாமல் மையப்புள்ளியில் நிலையாக நிற்க வைப்பதுதான் இந்த செல்பேலன்ஸிங் தொழில்நுட்பம். இதன்மூலம் கட்டுப்பாட்டை இழந்து வாகன ஓட்டிகள் கீழே விழும் வாய்ப்புகள் வெகுவாக குறைக்கப்படும்.
கோரக்பூர் ஐஐடியில் பயிலும், விகாஸ் போட்டர், ஆசுடோஸ் உபத்யாய் ஆகியோர் லிகேர் மொபிலிட்டி என்கிற நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் இருசக்கர வாகன துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் செல்ப் பேலன்ஸிங் பைக்குகளை தயாரிக்க துவங்கி இருக்கின்றனர்.
'உடல் ஊனமுற்றோரும், பக்கவாட்டு கூடுதல் சக்கரங்கள் இன்றி இந்த வாகனங்களை ஓட்ட முடியும், வாகனங்களை பேலன்ஸ் செய்ய தடுமாறுபவர்களும் இதனை சுலபமாக இயக்கலாம்' ஆகிய எக்கச்சக்க பலன்களுடனும் இந்திய சந்தையை எட்டிப்பார்க்கும் இந்த பைக்குகள், இரு சக்கர வாகன விபத்தில் ஒரு நாளைக்கு '120 பேர்' என்கிற உயிரிழப்பு எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
This innovation is life saving. Kudos 🤩 pic.twitter.com/pvVm66bNBy— The GOoD Father (@Badass_father) September 18, 2019
Social Plugin