தெய்வ திருமகள் திரைப்படத்தில், அப்பாவை கவனித்து கொள்ளும் குட்டி தேவதையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பேபி சாரா. தொடர்ந்து சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
குறிப்பிட்ட திரைப்படங்களில் பார்த்ததும் கொஞ்ச தோன்றும் நம்ம வீட்டு வாண்டுகள் போல தோன்றி இருந்த சாரா, டீனேஜ் பெண்ணாக மளமளவென வளர்ந்து நிற்கிறார்.
தற்பொழுது படிப்பில் கவனம் செலுத்தி வருவதால் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட சாரா, தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
அதில் தனது சமீபத்திய புகைப்படங்களை சாரா வெளியிட, பார்ப்பவர்களை 'நாம பார்த்த குட்டி சாராவா இது?' என வியப்பில் ஆழ்த்திவருகிறார்.
Social Plugin