Ad Code

Responsive Advertisement

சின்ன பாராட்டு கூட கிடைக்காமல் ஏங்கியவன் விஜய்...! ரசிகர்களை கலங்க வைத்த தளபதியின் உயிர் நண்பர்


நடிக்க வந்த புதிதில் நடிகர் விஜய் சந்தித்த கஷ்டங்கள் குறித்து நினைவு கூர்ந்து ரசிகர்களை கலங்க வைத்து இருக்கிறார் நடிகர் சஞ்சீவ்.

சின்னத்திரை சீரியல்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் சஞ்சீவ். இவர் நடிகர் விஜயின் பால்ய நண்பருமாவார். இன்றும் நடிகர் விஜயின் நட்பு வட்டத்துக்குள் இருக்கும் இவர், விஜயின் வளர்ச்சி குறித்து நெகிழ்ந்து பதிவிட்டு இருக்கிறார்.

பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழாவை அடுத்து விஜய்க்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்பு, மரியாதையை கண்டு பெருமிதம் கொண்ட அவர், ரசிகர்களின் இவ்வளவு அன்பை காணும் போது, சினிமாவில் நடிக்க வந்த புதிதில் 'சிறு பாராட்டு கிடைத்துவிடாதா?' என விஜய் ஏங்கிய தருணங்கள் தான் நினைவுக்கு வருகிறது.

ஆனால் இன்று இவ்வளவு ரசிகர்களின் அன்பு கிடைத்திருக்கிறது. கடவுளுக்கும் ரசிகர்களுக்கும் என் நன்றிகள்' என பெருமையுடன் பதிவிட, 'உங்களை போன்ற ஒரு நண்பர் கிடைக்க நடிகர் விஜயும் கொடுத்து வைத்தவர்தான்' என ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.