Ad Code

Responsive Advertisement

சமந்தா அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்..! பிரபல வீராங்கனை ஓப்பன் டாக்


பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான 'பிவி சிந்து', நடிகை சமந்தா பற்றி கூறியுள்ள கருத்து அவரது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்தியா சார்பாக உலகளாவிய பேட்மிட்டன் போட்டிகளில் கலந்து வருபவர் வீராங்கனை பிவி சிந்து. சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

இப்படியொரு சாதனை படைத்த இவரது வாழ்க்கை வரலாறும் பாலிவுட்டில் படமாக இருக்கிறது. இதற்கான நடிகை தேர்வு பணிகளில் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், நடிகை சமந்தா மற்றும் தீபிகா ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்ற முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இவர்களில், யார் உங்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்? என்ற கேள்வி பிவி சிந்துவிடம் கேட்கப்பட, 'சமந்தாவை விட தீபிகாதான் என் கதாபாத்திரத்திற்கு சரி, ஏனென்றால் அவரும் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை' என பதிலளித்து சமந்தா ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளார்.